இலங்கையில் தமிழீழ விடுதலை போராட்டம் புதிய வடிவம் பெற்றுள்ளது வைகோ பேட்டி
இலங்கையில் தமிழீழ விடுதலை போராட்டம் புதிய வடிவம் பெற்றுள்ளது என வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
மறைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள சுதுமலையில் 1987–ம் ஆண்டு ஆகஸ்டு 4–ந்தேதி தமிழீழ விடுதலை போராட்டம் குறித்து உரையாற்றினார்.
பிரபாகரனின் சுதுமலை பிரகடனம் பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
2006–ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசின் அழுத்தம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஐரோப்பிய யூனியன் சுப்ரீம் கோர்ட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை விலக்கி தீர்ப்பு வழங்கி உள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலை போராட்டம் புதிய வடிவம், புதிய பரிமாணம் பெற்றுள்ளது. விடுதலைப்புலிகள் போராட்டம் முடிந்துவிட்டது என்று சிங்களர்கள் கனவு காண வேண்டாம். இந்தியாவில் உள்ள சிலரும் கொட்டம் அடிக்க வேண்டாம்.
புலிகள் ஆதரவாளர் என்று எந்த நாட்டுக்கும் போக முடியவில்லை என்றாலும், எனக்கு அது பற்றி கவலை இல்லை. என்னுடைய ஆயுள் காலத்தில் உடல்நிலை ஒத்துழைத்தால் சுயசரிதை எழுதுவேன். அதில் தமிழீழ விடுதலை போராட்டம், பிரபாகரனுடான உறவு பற்றி குறிப்பிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் பேசிய உரையை வைகோ வாசித்தார்.
அதைத்தொடர்ந்து ம.தி.மு.க. இளைஞர் அணி மாநில துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் வி.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக் குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், செய்தி தொடர்பாளர் கோ.நன்மாறன் உள்பட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர்.
மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜெ.சிக்கந்தர் வரவேற்று பேசினார். ஏ.ஆர்.அரிராமஜெயம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில தீர்மானங்கள் வருமாறு:–
* தமிழகத்தில் உள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகள், வரத்து கால்வாய்கள், மதகுகளை 5 ஆண்டுக்குள் சீரமைக்கும் முழுமையான திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
* தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாண்டியாறு முதல் ஈரோடு வரை பிரசார பயணம் மேற்கொள்ளப்படும்.
* நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
* நதிநீர் பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும்.
* போதைப் பொருட்களை தடுக்க வலியுறுத்தி சென்னையில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
* தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரவுவதை அரசு தடுக்க வேண்டும்.
* தமிழக மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைக்கும், நிர்ப்பந்தத்துக்கும் பயந்துகொண்டு தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

Related Tags :
Next Story