‘சில்வர் ஓக்’ மரங்களை வெட்டக்கூடாது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
‘சில்வர் ஓக்’ மரங்களை வெட்டக்கூடாது என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தேயிலை பயிருக்கும், நீலகிரியின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கும் ‘சில்வர் ஓக்’ மரங்களை வெட்டக்கூடாது என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சில்வர் ஓக்’ மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசு திரைமறைவில் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், அதிகாரிகளும் இணைந்து இந்த திட்டத்தை வகுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தேயிலை தோட்டக்கழகத்தின் கீழ் 4 ஆயிரத்து 311 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது. இந்த தேயிலை பயிர் நன்கு வளர வேண்டும் என்பதற்காக ‘சில்வர் ஓக்’ மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த தேயிலைத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘சில்வர் ஓக்’ மரங்களையும், அதில் உள்ள தலா 3 முதல் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஈட்டி மரங்களையும் வெட்டுவதற்கு முடிவு எடுத்து, அதையும் ஆன்-லைன் டெண்டரில் விடக்கூடாது என்று வனத்துறை அமைச்சர் அளவில் விவாதிக்கப்பட்டு வருவதாக தேயிலை தோட்டக் கழக அதிகாரிகளே கூறி வருகிறார்கள்.
இந்த ‘சில்வர் ஓக்’ மரங்களை வெட்டுவதால் முதலில் தேயிலை பயிர்கள் மோசமாக பாதிக்கப்படும். அடுத்து நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலுக்கு கெடுதல் ஏற்படுத்தும்.
எனவே ‘சில்வர் ஓக்’ மரங்களை வெட்டி வீழ்த்துவது என்ற ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசின் திட்டத்திற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்துறை நிறுவனங்களையும், இதுபோன்ற கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேயிலை தோட்டக் கழகத்தையும் இப்படி சீரழித்துவிட்ட அ.தி.மு.க. அரசை இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் மட்டுமின்றி, அதை நம்பியிருக்கும் பணியாளர்களும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
ஆகவே, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தை மீண்டும் தி.மு.க. ஆட்சியில் இருந்ததுபோல் லாபத்தில் இயங்க வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து, அங்குள்ள பணியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.
எக்காரணம் கொண்டும் தேயிலை பயிருக்கும், நீலகிரியின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கும் ‘சில்வர் ஓக்’ மரங் களை வெட்டக்கூடாது என்றும், அதில் தனியார் மர வியாபாரிகளுடன் ‘சிண்டிகேட்’ அமைத்து குறைந்த விலைக்கு ‘சில்வர் ஓக்’ மரங்களை விற்கும் வனத்துறை அமைச்சரின் முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் ஒரு முறை டெல்லியில் போராடினால் பிரதமர் நரேந்திர மோடி மனம் இரங்குவார் என்று நம்பி தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த ஜூலை 16-ந் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு டெல்லியில் கிடைத்த பரிசு அடக்குமுறையும், கைதும் மட்டுமே.
கடுங்குளிரிலும், மழையிலும் தங்களை வருத்திக் கொண்டு போராடி வரும் விவசாயிகளின் நிலையை எண்ணி தி.மு.க. மிகுந்த வேதனைப்படுகிறது. இந்நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிக்கு கை கொடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதும், ‘கடன் தள்ளுபடி மாநில அரசின் கடமை’ என்று மத்திய பா.ஜனதா அரசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதும் வருத்தமளிக்கிறது.
அய்யாக்கண்ணு மற்றும் அங்கு போராடும் விவசாயிகளும் தங்களை வருத்திக் கொள்வதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது. விழிகள் கசிகிறது.
ஆகவே, தமிழக விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க தி.மு.க. என்றைக்கும் தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில், “கவலைப்படாதீர்கள், காலம் கனிந்து வரும். தி.மு.க. ஆட்சி விரைவில் அமையும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றப்படும்” என்ற உறுதியை அளித்து, டெல்லியில் போராடும் விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புமாறு என் இதயபூர்வமாக மட்டுமல்ல - உங்களுடன் ஒன்றிணைந்துவிட்ட உணர்வுடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Related Tags :
Next Story