அனைத்து மாநகர பஸ்களிலும் பயணச்சீட்டு வழங்க மின்னணு கருவி
அனைத்து மாநகர பஸ்களிலும் பயணச்சீட்டு வழங்க மின்னணு கருவி பயன்படுத்தப்படும்.
சென்னை,
சென்னையில் அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட் வழங்குவதற் காக 20-ந் தேதியில் இருந்து மின்னணு பயணச் சீட்டு வழங்கும் கருவி பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரின் ஆணைப்படி, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்குமான மின்னணு பயணச்சீட்டு கருவிகளின் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, மின்னணு பயணச்சீட்டு திட்டம் செயல்படுத்தும் நிறுவனங்களான அனலாஜிக்ஸ்டெக் இந்திய நிறுவனம் மற்றும் இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை சார்ந்த அலுவலர்கள், மின்னணு பயணச்சீட்டுத் திட்டம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தினர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு பயணச்சீட்டு கருவிகளை முழுவீச்சில் விரிவாக்கம் செய்து, வரும் 20-ந் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக்கழகம், சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டை முழு அளவில் பயணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நடத்துனர்கள் பயணச்சீட்டு வழங்குவதிலும், பயணிகள் பயணச்சீட்டுகளை பெறுவதிலும் உள்ள நடைமுறை எளிதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story