டிடிவி தினகரனை சந்தித்ததில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை விஜயதாரணி எம்.எல்.ஏ சொல்கிறார்


டிடிவி தினகரனை சந்தித்ததில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை விஜயதாரணி எம்.எல்.ஏ சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Aug 2017 1:12 PM IST (Updated: 5 Aug 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை விஜயதாரணி எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

சென்னை

அ.தி.மு.க அம்மா அணியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி சந்தித்தார். சந்திப்பிற்கு பின் விஜயதாரணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தினகரனது உறவினர் மறைவிற்கு ஆறுதல் கூறவே தினகரனை சந்தித்தேன். கட்சியை வழிநடத்தக் கூடிய தலைமையாக தினகரன் விளங்குவார்.தினகரனை முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரிக்க வேண்டும்.பாஜக செயலை கண்டிக்காவிடில் அதிமுக நிலைக்காது.கட்சியை வளர்க்க டிடிவி தினகரன் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டுகிறேன்.அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் தினகரனை சந்தித்ததில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை.சந்தானலெட்சுமி அம்மையார் மறைவையொட்டி துக்கம் விசாரிக்க டிடிவி தினகரனை சந்தித்தேன்.

 ஆளும்கட்சியின் சுதந்திரத்தை பாஜக பறித்துள்ளது அதிமுக இரு அணிகளுக்கும் அழுத்தத்தையும், அச்சத்தையும் தொடர்ந்து பாஜக ஏற்படுத்துகிறது.வாக்களித்த மக்களின் கோபத்தை பாஜக பெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story