அமைச்சர் உதயகுமார் மாறி மாறி பேசுவதில் கைதேர்ந்தவர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தாக்கு


அமைச்சர் உதயகுமார் மாறி மாறி பேசுவதில் கைதேர்ந்தவர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தாக்கு
x
தினத்தந்தி 5 Aug 2017 4:12 PM IST (Updated: 5 Aug 2017 4:36 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் உதயகுமார் மாறி மாறி பேசுவதில் கைதேர்ந்தவர் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தாக்கு

சென்னை,

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அதிரடியாக வெளியிட் டார்.  தினகரன் அறிவிப்புக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா  பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் நிருபர்களிடம்  கூறும் போது

புதிய நிர்வாகிகள் நியமனம் யாரை முன்னிலைப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. இது கட்சி வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது. புதிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளவர்கள் கட்சிக்காக உழைத்தவர்கள்தான். தியாகம் செய்தவர்கள்தான். ஆனால் ஏ.கே.போஸ், சத்யா, பழனி போன்றவர்கள் பொறுப்புகளை ஏற்க மறுத்து விட்டனர்.

புதிய நிர்வாகிகள் அறிவிப்பு அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் அம்மா பேரவை சிறப்பாக செயல்படுவதற்காகவா? அல்லது சிறப்பாக செயல்படும் பேரவையை முடக்குவதற்காகவா? என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.

இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு எப்படி உதவிகரமாக இருக்க முடியும்? நன்றாக செயல்பட்டு வருகின்ற ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தையே இது ஏற்படுத்தும். மேலும் நிர்வாகிகள் செயல்பாட்டை முடக்கிபோடுகின்ற நிகழ்வாகவே இதுபோன்ற அறிவிப்புகள் ஏற்படுத்தும். தனிநபர்களை முன்னிலைபடுத்த அறிவிக்கப்படும் அறிவிப்பாகவே இருக்கும்.

ஆட்சியையும், கட்சியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால் இதுபோன்ற அறிவிப்புகள் நன்றாக செயல்படுகின்ற கட்சியிலும், ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தவும், மக்கள் எள்ளிநகையாடவும் உதவும். இவ்வாறு  கூறினார்.

இது குறித்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியதாவது:-

அமைச்சர் உதயகுமார் மாறி மாறி பேசுவதில் கைதேர்ந்தவர். புதிய நிர்வாகிகளை அறிவித்த பின்னரே, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பது வழக்கம். சசிகலாவால் நியமிக்கப்பட்ட அனைவரும் பதவியை ராஜினாமா செய்வார்களா? ஜெயலலிதா இருந்தபோது கேள்வி கேட்க தைரியம் இல்லாதவர்கள் தற்போது கேள்வி கேட்பது ஏன். பொறுப்பு வேண்டாம் என்பவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.என கூறினார்.

Next Story