திருச்சி விமான நிலையத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்த முயற்சி?
திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்த முயற்சி நடந்ததா என போலீஸ் விசாரிக்கிறது.
திருச்சி,
அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் இடம் பெற்றுள்ள சில அமைச்சர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த மோதல் போக்கினால் ஏற்படும் விளைவுகளை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்கள் அணியில் உள்ள காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் மற்றும் கூடுதல் நிர்வாகிகளை நேற்று முன்தினம் நியமித்தார்.
அதிமுக மூன்று அணிகள் இணைப்பு விவகாரத்தில் குளறுபடி நீடித்து வருகிறது. இந்நிலையில் மூன்று அணியை சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி சந்தித்தனர். மூவரும் 10 நிமிடம் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து அவர்கள் திருச்சி சென்றனர். திருச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேச வரும்போது மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் குத்த முயற்சி செய்து உள்ளார் என கூறப்படுகிறது. அதிமுகவினர் அவரை அடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மர்ம நபர் விமான நிலைய போலீஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story