சென்னையில் கத்தி முனையில் பெண் பாலியல் பலாத்காரம்! அதிர்ச்சி சம்பவம்


சென்னையில் கத்தி முனையில் பெண் பாலியல் பலாத்காரம்! அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 7 Aug 2017 12:29 PM IST (Updated: 7 Aug 2017 1:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கத்தி முனையில் அழக நிலைய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டார்.

ஆலந்தூர்,

பல்லாவரத்தில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில்  மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரின் என்ற  39 வயது பெண் வேலை பார்த்து வருகிறார்.

இவர் ஆதம்பாக்கம் 9-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம வாலிபர் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தான்.

சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் வீட்டின் உள்ளே வாலிபர் நிற்பதை கண்டு கூச்சலிட்டார்.

உடனே அவன் கத்திமுனையில் பெண்ணை மிரட்டி கற்பழித்தான். பின்னர் அவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அப்போது அவன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அழகு நிலைய பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆதம் பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story