பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது


பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 8 Aug 2017 1:44 AM IST (Updated: 8 Aug 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்மஸி, பிஸியோதெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பம் தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரிகளில் வழங்கும் பணி தொடங்கியது.

சென்னை,

அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் சேர 250 இடங்களும், பி.பார்மஸி படிப்பில் சேர 108 இடங்களும், பிஸியோதெரபி படிக்க 75 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் உள்பட பல்வேறு படிப்புகளுக்கு 538 இடங்கள் உள்ளன.

சுயநிதி கல்லூரிகளில் 7 ஆயிரத்து 498 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு விண்ணப்பம் 23–ந் தேதி மாலை 5 மணிவரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக்கல்வி இயக்குனரகம், பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24–ந் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

இந்த தகவலை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.


Next Story