ஜி.எஸ்.டி. தொடர்பாக மாநில அரசு வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் விக்கிரமராஜா
22-ந் தேதி போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
சென்னை,
ஜி.எஸ்.டி. தொடர்பாக மாநில அரசு வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் 22-ந் தேதி போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்துப் பேசினர், பின்னர் நிருபர்களுக்கு விக்கிரமராஜா அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு மற்றும் பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஜி.எஸ்.டி.யை கண்டித்து 8-ந் தேதியன்று (நேற்று) கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தோம். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எங்களை அழைத்துப் பேசி, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
அதன் அடிப்படையில் போராட்டத்தை தள்ளி வைத்ததால், ஒருங்கிணைப்புக் குழுவை அழைத்து முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் கடலைமிட்டாய், கையால் செய்யும் தீப்பெட்டி, பட்டாசுத் தொழில்கள் தொடர்பான வரியைக் குறைப்பதற்கு கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளோம்.
குறிப்பாக, கடலை மிட்டாய்க்கு 0 முதல் 5 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதுபோல, குளிர்சாதன வசதி இல்லாத ஓட்டல்களுக்கும் 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
தமிழகம் தழுவிய 21 லட்சம் வர்த்தகர்களின் சார்பாக வணிகர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று முதல்-அமைச்சர் தலைமையில் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இதற்கான முழு முயற்சி எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
22-ந் தேதியன்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய தென்மண்டல ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. ஜி.எஸ்.டி. தொடர்பாக மாநில அரசு கொடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறினால், இந்த 5 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் இணைந்து 22-ந் தேதியன்று முதல்கட்ட போராட்டம் தொடர்பாக அறிவிப்போம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.
22-ந் தேதிக்குள்ளாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த சூழலில் 22-ந் தேதியன்று நடக்கும் கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், செங்கல் உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து, பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை பெருமளவில் குறைக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story