இந்து சமய அறநிலையத்துறை கட்டிடங்கள், சேமிப்புக் கிடங்குகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை கட்டிடங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்வது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, ஆக்கிரமிப்பில் உள்ள திருக்கோவில்களின் சொத்துக்களை மீட்டு அவற்றின் வருவாயைப் பெருக்குவது, பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மதுரை மாநகர், எல்லீஸ் நகரில் 12 ஆயிரத்து 237 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் 1 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் மாவட்ட உதவி ஆணையர் அலுவலகக் கட்டிடத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இப்புதிய ஒருங்கிணைந்த இணை ஆணையர் அலுவலக கட்டிடத்தில், உதவி ஆணையர் அலுவலகம், செயற்பொறியாளர் அலுவலகம், மண்டல தணிக்கை அலுவலகம், இணை ஆணையர் அலுவலகம், துணை ஆணையர் (சரி பார்ப்பு) அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர், தனி அலுவலர் (ஆலய நிலங்கள்) ஆகிய அலுவலகங்கள் செயல்படும்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்க ஏதுவாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் ஓய்வுக் கூடம் மற்றும் மாரியம்மன் கோவிலில் 50 பக்தர்கள் உணவருந்த ஏதுவாக 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவகம்;
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்; திண்டுக்கல் சீனிவாசப் பெருமாள் கோவில்; திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையங்கள் என மொத்தம் 6 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 6.5.13 அன்று சட்டசபை விதி 110-ன் கீழ், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மூலமாக 1.25 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும் என்று அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிராமத்தில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில், மொத்தம் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்புக் கிடங்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்ளளவில், மொத்தம் 7 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கூடுதல் சேமிப்புக் கிடங்குகள்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் நகர கூட்டுறவு வங்கியின் ராமநாதபுரம் கிளை அலுவலகக் கட்டிடம், என மொத்தம் 24 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story