மு.க.ஸ்டாலினை கைது செய்தது சரியான நடைமுறை இல்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
மு.க.ஸ்டாலினை தடுத்து நிறுத்தி கைது செய்தது சரியான நடைமுறை இல்லை என ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை தி.மு.க.வினர் தூர்வாரி சீரமைத்துள்ளனர். அதை பார்வையிட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றபோது, அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். எனவே, நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபடும் தி.மு.க.வினருக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும், கச்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, சேலம் மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘மு.க.ஸ்டாலின், கச்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட திரளான தொண்டர்களுடன் வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதனால், போலீசார் அவரை கைது செய்தனர்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி, ‘மு.க.ஸ்டாலின் எத்தனை பேருடன் வந்தால், ஏரியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்?’ என்பது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், ‘மு.க.ஸ்டாலின் 128 பேருடன் ஏரியை பார்வையிட செல்வார்’ என்று கூறி அந்த பெயர் விவரப்பட்டியலை தாக்கல் செய்தார். மேலும், மு.க.ஸ்டாலினுடன் ஏரிக்கு அருகே 30 பேர் செல்வார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் தள்ளி நிற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, ‘குடிமராமத்து திட்டத்தின் கீழ் கச்சராயன்பாளையம் ஏரியை தமிழக அரசு தூர்வாரியது. இந்த ஏரியை தி.மு.க. தொண்டர்கள் தூர்வாரவில்லை’ என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம்.துரைசாமி, ‘அதனால் என்ன? மு.க.ஸ்டாலின் ஏரியை பார்வையிடுவதால் என்ன பிரச்சினை வரப்போகிறது? சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது போலீசாரின் கடமை’ என்றார்.
இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, ‘தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் அரசால் தூர்வாரப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் வெறும் 100 ஏரிகளை தூர் வாரியிருப்பார்கள். கச்சராயன்பாளையம் ஏரியை அரசு செலவில் தூர்வாரப்பட்டுள்ளது. இந்நிலையில், மு.க.ஸ்டாலினை ஏரியை பார்வையிட அனுமதித்தால், அரசு தூர்வாரிய ஏரியை நாங்கள் தான் தூர்வாரினோம் என்று மேலும் பலர் உரிமை கொண்டாடுவார்கள். மு.க.ஸ்டாலினை உள்ளூர் விவசாயிகள் தடுத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது. அதனால், தற்போதுள்ள சூழ்நிலையில் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கக்கூடாது. முன் அனுமதியின்றி மு.க.ஸ்டாலின் அங்கு செல்ல முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் தி.மு.க. தொண்டர்கள் பஸ்களை அடித்து உடைத்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். எனவே, தற்போது கச்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கினால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரர் வக்கீல் சண்முகசுந்தரத்தை பார்த்து, ‘ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுடன் 25 பேர் மட்டும் சென்றால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், அரசு செலவில் ஏரி தூர்வாரப்பட்டாலும், அதை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பார்க்க சென்றவரை தடுத்து நிறுத்தி கைது செய்தது சரியான நடைமுறை இல்லை. இந்த செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story