தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 9 Aug 2017 1:41 PM IST (Updated: 9 Aug 2017 1:41 PM IST)
t-max-icont-min-icon

அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

சென்னை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை, கேரளாவில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல்கள் உள்ளன.  24 மணி நேரத்தில் எல்லா வகையான வைரஸ் காய்ச்சலை அறிய வசதிகள் உள்ளன. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் . 24 மணி நேரத்தில் எல்லா வகையான வைரஸ் காய்ச்சலை அறிய வசதிகள் உள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு போதிய அளவு மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. 10 நாட்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தில் மர்மக் காய்ச்சல் என்று எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும் போது தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 10 பேரும், இதர காய்ச்சலால் 15 பேரும் உயிரிழந்து உள்ளனர் என கூறினார்

Next Story