தான்தோன்றி தனமாக பேசிவரும் ஜெயக்குமார் கட்சியை விட்டு நீக்கப்படுவார் புகழேந்தி


தான்தோன்றி தனமாக பேசிவரும் ஜெயக்குமார்  கட்சியை விட்டு நீக்கப்படுவார் புகழேந்தி
x
தினத்தந்தி 9 Aug 2017 9:22 PM IST (Updated: 9 Aug 2017 9:21 PM IST)
t-max-icont-min-icon

தான்தோன்றி தனமாக பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டிப்பாக கட்சியை விட்டு நீக்கப்படுவார் என புகழேந்தி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.  அம்மா அணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில்  60 புதிய நிர்வாகிகளுக்கு தினகரன் பதவி வழங்கினார். அவர்கள் டி.டி.வி. தினகரனை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விரைவில் டி.டி.வி. தினகரன் தலைமைக் கழகம் வருவார் என்றும், அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி செய்தியார்களிடம் கூறியதாவது:

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கட்சி நடவடிக்கை தேவையில்லை.   தான்தோன்றி தனமாக பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டிப்பாக கட்சியை விட்டு நீக்கப்படுவார்.  நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பங்கேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள  தலைமைக் கழகத்துக்கு நாளை காலை 10 மணிக்கு வர உள்ளார். அங்கு கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story