முகுந்த்சந்த் போத்ரா உள்பட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி போலீசார்-வக்கீல்கள் இடையே வாக்குவாதம்
சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா உள்பட 3 பேரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் கோர்ட்டு அனுமதி அளித்தது.
சென்னை,
சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா உள்பட 3 பேரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் கோர்ட்டு அனுமதி அளித்தது. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்த போத்ராவை வக்கீல் ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்ததை பெண் சப்-இன்ஸ்பெக்டர் தடுத்ததால் போலீசார்-வக்கீல்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, அவரது மகன்கள் ககன் போத்ரா, சந்தீப் போத்ரா ஆகியோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களில் முகுந்த்சந்த் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் 3 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மாஜிஸ்திரேட்டு கபீர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த போத்ரா உள்பட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். கோர்ட்டு அறைக்கு அருகே வந்தபோது, போத்ரா தன்னால் நடக்க முடியவில்லை என்று கூறி தரையில் அமர்ந்தார். இதை அங்கு நின்று கொண்டிருந்த வக்கீல் ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். போத்ரா மீதான கந்துவட்டி புகாரை விசாரித்து வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அந்த வக்கீலிடம் இருந்து செல்போனை பறித்தார்.
அந்த வக்கீல், வீடியோ காட்சியை அழித்து விடுவதாகவும் செல்போனை திரும்ப தரும்படியும் சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்டார். பின்னர் வீடியோ காட்சியை அழித்து விட்டு வக்கீலிடம், அவர் செல்போனை ஒப்படைத்தார். பெண் சப்-இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட வக்கீல், சக வக்கீல்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கோர்ட்டு அறை முன்பு 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குவிந்தனர். அவர்கள் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டில் இருந்த போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக பேசினார். அவரை வக்கீல்கள் அடித்து விரட்டினர். இந்தநிலையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே தரையில் அமர்ந்த போத்ராவை சக்கர நாற்காலியில் அமர வைத்து போலீசார் கோர்ட்டு அறைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாஜிஸ்திரேட்டிடம், போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை போத்ரா தெரிவித்தார். மேலும், மாஜிஸ்திரேட்டு முன்பு சென்று போலீசார் மீது சில புகார்களை கூறினார்.
அப்போது சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அவரை, பின்னால் வரும்படி கூறி சட்டையை பிடித்து இழுத்து சென்றார். போலீஸ்காரரின் இந்த நடவடிக்கைக்கு மாஜிஸ்திரேட்டு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் முகுந்த்சந்த் போத்ரா உள்பட 3 பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த மாஜிஸ்திரேட்டு, போத்ராவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story