சந்தைக்கு சட்ட விதிகளை மீறி கால்நடைகள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
அந்தியூர் சந்தைக்கு மாடுகள், குதிரைகள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
விலங்குகள் வதை தடுப்பு சட்ட விதிகளுக்கு எதிராக அந்தியூர் சந்தைக்கு மாடுகள், குதிரைகள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வடபழனியைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள அந்தியூர் குருநாதர்சுவாமி கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் விமரிசையாக நடைபெறும்.
இந்த திருவிழாவை முன்னிட்டு திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் இருந்தே மாடு மற்றும் குதிரை சந்தை மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சந்தை நடைபெற்றபோது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், 9-ந் தேதி (நேற்று) முதல் வருகிற 12-ந் தேதி வரை, அந்தியூர் புதுப்பாளையத்தில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடை சந்தை நடைபெறுகிறது. மேலும், இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான கால்நடைகளும், பொதுமக்களும் ஒரே நேரத்தில் கூடுவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இந்த சந்தைக்கு கொண்டு வரப்படும் குதிரைகள், மாடுகள் மூச்சுவிடக் கூட முடியாத நிலையில், வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. இது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
எனவே இந்த கால்நடைகளை வாகனங்களில் கொண்டு வரும்போது, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் படி, கால்நடை டாக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையான சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், இந்த சந்தையில், கால்நடைகள் இறைச்சிக்காக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இதையும் கண்காணிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், “மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளை வாகனங்களில் சந்தைக்கு கொண்டு வரும்போதும், கொண்டு செல்லும்போதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகள் மீறப்படுகிறதா? என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். அதேபோல அந்தியூர், புதுப்பாளையத்தில் நடைபெறும் கால்நடை சந்தையில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story