மக்களின் -தொண்டர்களின் எண்ணப்படி முடிவு எடுக்கபடும் -ஓ.பன்னீர்செல்வம்


மக்களின் -தொண்டர்களின் எண்ணப்படி  முடிவு எடுக்கபடும் -ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 10 Aug 2017 5:43 PM IST (Updated: 10 Aug 2017 5:43 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் விருப்பம் -தொண்டர்களின் எண்ணப்படி முடிவு எடுக்கபடும் என முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். கூட்டத்தில் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இது குறித்து பேட்டி அளித்த தினகரன்  கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் முதலமைச்சர் உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன்  என கூறினார்.

இந்த நிலையில்  இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தற்போது தமிழக அரசியல் நிகழ்வுகளை  கூர்ந்து கவனித்து வருகிறோம். மக்களின் விருப்பபடியும்  அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணப்படியும்  முடிவு 
எடுக்கபடும் என கூறினார்.

Next Story