அரசாங்க அரங்கத்தை பிடிக்க முயன்றவரால், அரசை பிடிக்க முடியாதா? - ஸ்டாலின் குறித்து வைரமுத்து சுவாரஸ்ய பேச்சு


அரசாங்க அரங்கத்தை பிடிக்க முயன்றவரால், அரசை பிடிக்க முடியாதா? - ஸ்டாலின் குறித்து வைரமுத்து சுவாரஸ்ய பேச்சு
x
தினத்தந்தி 10 Aug 2017 8:56 PM IST (Updated: 10 Aug 2017 8:55 PM IST)
t-max-icont-min-icon

அரசாங்க அரங்கத்தை பிடிக்க முயன்றவரால், அரசை பிடிக்க முடியாதா? என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.

சென்னை,

சென்னையில் முரசொலி பவளவிழா  கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  கவிஞர் வைரத்து சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

18 வயதில் முரசொலி பத்திரிகையை நடத்த கருணாநிதி பொறுப்பு எடுத்துக்கொண்டார்.  அது காதலியை தேடும் வயது என்றும், திருமண பத்திரிகை அடிக்கும் வயதில், கொள்கைக்காக பத்திரிகையை நிறுவியவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.

பணம், செல்வாக்கு என்ற எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், ஒரு பத்திரிகையை நிறுவி அதை 75 வருட காலம் நீடித்து வளர செய்தது கருணாநிதி மட்டுமே.

முரசொலி பவள விழாவிற்காக அரசாங்க அரங்கத்தை பிடிக்க முயன்றவரால், அரசை பிடிக்க முடியாதா?   என ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம் சூட்டினார்.

Next Story