அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம் - திவாகரன் பரபரப்பு பேட்டி


அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம் - திவாகரன் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2017 10:12 PM IST (Updated: 10 Aug 2017 10:12 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம் என திவாகரன் கூறியுள்ளார்.

சென்னை,

சசிகலாவின் சகோதரர் திவாகரன் தஞ்சையில் செய்தியார்களிடம் கூறியதாவது:

தினகரன் துணை பொதுச்செயலாளராக செயல்பட முடியாது என்ற தீர்மானம் தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம். பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசயம் மாறிவிடுகிறது. கட்சி நிச்சயம் காப்பாற்றப்பட்டுவிடும், ஆட்சியை காப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்.

தினகரன் தலைமையில் மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்டம் என்ன என்பது தெரியும். ஓராண்டாக கட்சி நடவடிக்கைகள் எதுவுமே நடைபெறவில்லை. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்திற்கு என்ன பதில்? அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே எங்கள் பங்காளிகள் தான். தற்போது நடைபெறக்கூடிய நிகழ்வுகளுக்கு எதிர்காலம் பதில் சொல்லும். என்ன பிரச்சனை என நானே முதல்-அமைச்சரிடம் தொலைபேசியில் கேட்பேன்.

முதல்-அமைச்சர்,அமைச்சர்களுக்கு என்ன நெருக்கடி என்பது குறித்து எங்களால் யூகிக்க முடியவில்லை. இரு அணிகளும் பயத்தில் வேண்டுமென்றால் இணையலாம். மனப்பூர்வமாக இணைய வாய்ப்பு இல்லை. எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களில் தொண்டர்களுக்கு தெளிவு பிறக்கும். மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி சிறப்பாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story