சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று முடிவடைகிறது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று முடிவடைகிறது. துணை கலந்தாய்வு 17–ந்தேதி நடக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 இடங்கள் இருக்கின்றன. என்ஜினீயரிங் படிப்பில் மாணவ–மாணவிகள் சேருதவற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.
கலந்தாய்வில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வந்தன. ஆனால் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தான் விண்ணப்பித்து இருந்தனர்.
தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17, 18–ந்தேதிகளில் நடைபெற்றது. விளையாட்டு பிரிவினருக்கு 21–ந்தேதி கலந்தாய்வு நடந்தது.
பொது கலந்தாய்வு 23–ந்தேதி தொடங்கியது. நேற்று வரை 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்ந்து எடுத்துள்ளனர். பொது கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. 50–க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தலா 30 அல்லது 35 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை கலந்தாய்வு 17–ந்தேதி நடைபெறுகிறது. காலியாக இருக்கும் அருந்ததியினர் இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அருந்ததியினரும் கலந்து கொள்ளலாம்.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குறித்து அதன் செயலாளர் பேராசிரியை இந்துமதி கூறுகையில், தற்போது காலியாக கிடக்கும் இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு மறுநாள் துணை கலந்தாய்வு நடத்தப்படும் என்றார்.

Related Tags :
Next Story