தீப்பெட்டி, பட்டாசு மீதான வரியை குறைக்க வேண்டும் மத்திய நிதி மந்திரியிடம், அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை டெல்லியில் அவரது இல்லத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சந்தித்தார்.
சென்னை,
அப்போது தர்மபுரி மாவட்டத்தில் எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்படும், எந்திர தயாரிப்பு தீப்பெட்டிகளுக்கான ஜி.எஸ்.டி.யை 6 சதவீதமாக குறைக்க வேண்டும். அதேபோல பட்டாசுக்கு விதிக்கப்பட்டு உள்ள 28 சதவீத வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்.
கோவை பகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் கிரைண்டர், மோட்டார் பம்புசெட்டுகள் ஆகியவற்றுக்கான வரி உயர்த்தப்பட்டிருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இப்பொருட்கள் மீதான வரியையும் குறைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். அவரது கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மத்திய நிதி மந்திரி, கோரிக்கைகளை பரிசீலித்து நல்ல முடிவு எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
இந்த தகவல் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story