9,489 ஓட்டுனர் உரிமங்களுக்கு தற்காலிக தடை தமிழக அரசு அறிவிப்பு


9,489 ஓட்டுனர் உரிமங்களுக்கு தற்காலிக தடை தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2017 3:00 AM IST (Updated: 10 Aug 2017 11:22 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2 மாதங்களில் 9,489 ஓட்டுனர் உரிமங்களுக்கு தற்காலிக தடை விதிக்கபடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, ஆக.11–

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கடந்த 2016–ம் ஆண்டு நிகழ்ந்த 71 ஆயிரத்து 431 சாலை விபத்துகளில் 17 ஆயிரத்து 218 பேரும், இந்த ஆண்டு (2017) ஜூன் மாதம் வரை 33 ஆயிரத்து 345 சாலை விபத்துகளில் 8 ஆயிரத்து 452 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு சாலை பாதுகாப்பு குழு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல் போன்ற குற்றங்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி மேற்காணும் குற்றங்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்துசெய்ய போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாக கடந்த 2 மாதங்களில் 9 ஆயிரத்து 489 ஓட்டுனர் உரிமங்கள் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story