அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’
70 லட்சம் குடும்பங்களுக்கு ‘செட்டாப் பாக்ஸ்’ இலவசமாக வழங்குவது இம்மாத இறுதியில் தொடங்கப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது, 70 லட்சம் குடும்பங்களுக்கு ‘செட்டாப் பாக்ஸ்’ இலவசமாக வழங்குவது ஆகிய திட்டங்கள் இம்மாத இறுதியில் தொடங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் அரசு கேபிள் டி.வி.யின் செயல்பாடுகள் புதுப்பிக்கப்பட்டு, சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 2.9.11 அன்று சேவை தொடங்கப்பட்டது. தற்போது அரசு கேபிள் டி.வி. 27 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 70.52 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கேபிள் டி.வி. சேவை ‘அனலாக்’ என்ற தொழில்நுட்ப முறைப்படி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் கேபிள் டி.வி. சேவையை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு சேவையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதற்காக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உள்பட தேவையான தகவல்களை பதிவு செய்வதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு கேபிள் டி.வி. நிறுவனம் உத்தரவிட்டது. 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள், தங்களுக்கு டிஜிட்டல் ஒளிபரப்புக்கான எஸ்.டி. மற்றும் எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
இலவச சேனல்கள், கட்டண சேனல்களுடன் கேபிள் டி.வி. நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், கட்டண சேனல்களுக்கு எவ்வளவு சந்தா செலுத்த வேண்டும் என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன.
அந்த வகையில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான பூர்வாங்கப் பணிகள் அனைத்தையும் கேபிள் டி.வி. நிறுவனம் செய்து முடித்துவிட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் 300 எஸ்.டி. சேனல்களையும், 30 எச்.டி. சேனல்களையும் ஒளிபரப்பும் திறனை அரசு கேபிள் டி.வி. கொண்டுள்ளது.
அடுத்தகட்டமாக அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு ஆபரேட்டர்கள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். அவர்கள் டிஜிட்டல் முறை ஒளிபரப்பில் எந்தெந்த சேனல்களை பெற விரும்புகிறார்கள், எந்தவித செட்டாப் பாக்ஸ்களை விரும்புகிறார்கள் என்ற விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களின் அடையாளச் சான்று, முகவரி சான்று போன்ற ஆவணங்களுடன் சேர்த்து ஆபரேட்டர்கள் வாங்குவார்கள். இந்த விவரங்கள் அனைத்தையும் கேபிள் டி.வி. நிறுவனத்திடம் ஆபரேட்டர்கள் பதிவு செய்ய வேண்டும்.
இந்த பணிகளுக்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி என 4 மண்டலங்களாக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பிரித்து வைத்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தொடங்குவதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு தொடர்ந்து பெற்று வருகிறது. 17.4.17 அன்று டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், ஏற்கனவே 2 முறை காலஅவகாசத்தை தமிழக அரசு கேட்டு பெற்றுள்ளது.
அதன்படி வருகிற 17-ந் தேதியுடன் இந்த காலஅவகாசம் முடிவடைகிறது. ஆனால் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தொடங்குவதற்காக சில நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியதுள்ளது. எனவே மேலும் 3 மாத காலஅவகாசத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது தமிழக அரசு வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:-
தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்கள் 75 லட்சமும், எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் 12.5 லட்சமும் தேவைப்படும் என்று கணித்துள்ளோம். அவற்றில் 60 லட்சம் எஸ்.டி செட்டாப் பாக்ஸ் மற்றும் 10 லட்சம் எச்.டி. செட்டாப் பாக்ஸ்களை தயாரித்து வழங்குவதற்கு 2 கம்பெனிகளை டெண்டர் மூலம் முடிவு செய்தோம். செட்டாப் பாக்ஸ்களை வழங்குவதற்கு அந்த 2 நிறுவனங்களுக்கும் கடந்த 3-ந் தேதி ஆணைகள் வழங்கப்பட்டன.
அந்த 2 இந்திய நிறுவனங்களும் சீனா, தைவான் நாட்டில் இருந்து செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வழங்கும். அவற்றுக்கான தரச்சான்றை பெற்றிருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அந்த செட்டாப் பாக்ஸ்களுக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் உண்டு. செட்டாப் பாக்ஸ்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதை கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். டிஜிட்டல் ஒளிபரப்புக்கான கட்டணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிப்படி, அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் (70.52 லட்சம் பேர்) செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும்.
தற்போது இன்னும் சில பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன. லட்சக்கணக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் விண்ணப்பங்களை வாங்கிய பிறகு அவர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும். அவை சரியாக ஒளிபரப்பை செய்கிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும். இதற்காகத்தான் மத்திய அரசிடம் காலஅவகாசத்தை தமிழக அரசு கோருகிறது.
இந்தியா முழுவதும் டிஜிட்டல் முறையை கொண்டுவருவதற்கான அறிவிப்பை 2011-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு 5 ஆண்டுகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. ஆனால் 17.4.17 அன்று டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தமிழக அரசு 4 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவில் நியாயம் இல்லை. தமிழக அரசும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக காலஅவகாசத்தைக் கேட்டுப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் டிஜிட்டல் ஒளிபரப்பு முறையையும், இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டத்தையும் இம்மாத இறுதியில் முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார். பின்னர் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story