சசிகலா எங்கு இருக்கிறாரோ அங்கு தான் அ.தி.மு.க. இருக்கிறது - திவாகரன்
சசிகலா எங்கு இருக்கிறாரோ அங்கு தான் அ.தி.மு.க. இருக்கிறது என தஞ்சையில் சசிகலாவின் தம்பி கூறி உள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும், எனவே அவரது கட்சி பதவி நியமனங்கள் செல் லாது என்றும் எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியது சசிகலா குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் தஞ்சையில் சசிகலாவின் தம்பி திவாகரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
பொது செயலாளர், துணை பொது செயலாளரை விலக்கி வைக்க வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் கொடுப்பதாக தெரியவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். ஓ. பன்னீர் செல்வம் மட்டும் அல்ல. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பங்காளிகள்தான். எங்களுக்குள் சண்டையும் வரும். சமரசமும் வரும். தற்போதைய செயல்பாடுகளால் தொண்டர்கள் மட்டும் அல்ல. நாங்களும் குழம்பித்தான் உள்ளோம். தெளிவான வழி விரைவில் பிறக்கும்.
அ.தி.மு.க. எங்கு இருக்கிறது. தொண்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது விரைவில் தெரியும். மீதமுள்ள 4 ஆண்டுகள் ஆட்சி நிலைப்பது என்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் நடவடிக் கையில் தான் உள்ளது.
இந்த ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும். எங்களால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் வராது. பதவி வந்தவுடன் குணங்கள் மாறுவது இயல்பு. எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை மேலூர் கூட்டத்தில் தெரியும்.
மேலூர் உள்பட 9 இடங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு பிறகு நாங்கள் யார் என்பது தெரியும். சசிகலா எங்கு இருக்கிறாரோ அங்கு தான் அ.தி.மு.க. இருக்கிறது என்பதில் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். இரு அணிகளும் இணைவதற்கு அவகாசம் கொடுத்தோம். அவர்கள் இணையவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்ற அச்சத்தில் இணைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story