டிடிவி தினகரனுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்கள்?
டிடிவி தினகரனுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என மேலூர் பொதுக்கூட்டத்தில் தெரியவரும்.
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் நிரந்தரமாக நீக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ள நிலையில், டி.டி.வி.தினகரன் நேற்று தஞ்சாவூர் சென்றிருந்தார்.
மரணம் அடைந்த அவரது மாமியார் படத் திறப்பு நிகழ்ச்சியில் பங் கேற்க தினகரன் சென்றிருந்த போது தான், எடப் பாடி அணியினர் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இதையறிந்த தினகரன் ஆவேசம் அடைந்தார்.
எடப்பாடி அணியை கடுமையாக தாக்கி பேட்டி அளித்தார்.
அதன் பிறகு தஞ்சையில் டி.டி.வி.தினகரனை எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), உமா மகேஸ்வரி (விளாத்திக் குளம்), சுப்பிரமணியன் (சாத்தூர்) சுந்தர்ராஜன் (ஓட்டப்பிடாரம்) மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) தங்கத்துரை (நிலக்கோட்டை) பழனியப்பன் (பாப்பி ரெட்டிப்பட்டி), ஜக்கையன் (கம்பம்) கதிர்காமு (பெரியகுளம்) முத்தையா (பரமக்குடி) ரெங்கசாமி (தஞ்சாவூர்) ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அவர்கள் தினகரனுடன் ஆலோசித்தனர்.
இதன் பின்னர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில்பாலாஜி அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆவேசமாக கருத்துக்களை கூறினார். சசிகலா, தினகரன் ஆகியோரால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டட்டும் பார்க்கலாம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார். இதே போல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரும் எடப்பாடி அணிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பிரசாரம் செய்தார்கள். இப்போது என்ன நடந்து விட்டது, அவர்கள் சுயநலத்திற்காக கட்சியை தவறாக வழி நடத்தி செல்வதை ஏற்க முடியாது. எடப்பாடி பழனி சாமியை முதல்வராக முன்மொழிந்தது. யார் என்று அவர் சொல்லத்தயாரா? செங்கோட்டையனை சிபாரிசு செய்தது யார்? அவை தலைவர், பொருளாளர் போன்ற பொறுப்புகளை வழங்கியது யார்? அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
அம்மா முதல்வராக இருந்தால் தவறு செய்த அத் தனை அமைச்சர்களையும் உடனடியாக மாற்றம் செய்வார். ஆனால் தினகரன் அப்படி செய்தாரா? கட்சி வளர்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
புதிய நிர்வாகிகளை நியமித்ததில் என்ன தவறு உள்ளது. அப்படியானால் புதிதாக யாரும் பொறுப்புக்கு வரக் கூடாதா? எங்களை ஏற்க மறுக்க காரணம் என்ன?
குடியாத்தம் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் தினகரன் துணை பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என எடுக்கப்பட்ட முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நேற்று நடந்தது பொதுக்குழுவா, செயற்குழுவா அல்லது அமைச்சரவை, கூட்டமா? என்ன கூட்டம் என்பது தெரியவில்லை.
குறிப்பிட்ட நபர்கள் சேர்ந்து எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டப்படி செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.பாலசுப்பிரமணி கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தற்போதுள்ள ஓ.பி.எஸ், இ.பி.எஸ், ஆகிய இரு அணியை சேர்ந்தவர்களுடைய வற்புறுத்தலின் பேரில் தான் சசிகலா பொதுச்செயலாளராக இருக்க ஒப்புக்கொண்டார்.
கூவாத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் சகோதரர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என சசிகலா கேட்டுக் கொண்டதின் பேரில் தான் தற்போது அவர் முதல்-அமைச்சராக பதவி வகிக்கிறார். அவருக்காக சசிகலா எங் களிடம் சத்தியமே வாங்கி னார். ஆனால் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த நன்றியை மறந்து விட்டார்.
பொதுச்செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக இரு அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது தான் பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும் அதன் பிறகு தன் முடிவை தெரிவிப்பதாகவும் கூறினார். ஆட்சிக்கு எடப்பாடியும் கட்சிக்கு தினக்ரனும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் இவ்வாறு அவர் கூறினார்.
மேலூர் உள்பட 9 இடங்களில் தினகரன் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளார். முதலில் நடக்கும் மேலூர் பொதுக்கூட்டத்தில் அவருக்கு ஆதரவாக எவ்வாளவு எம்.எல்.ஏக்கள் திரளுவார்கள் என தெரியவரும். எம்.எல்.ஏக்கள் வெற்றி வேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோரும் தினகரன் ஆதரவாளராக உள்ளனர்.
Related Tags :
Next Story