அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் இருவரும் தினகரன் அணியில்தான் உள்ளனர்- புகழேந்தி
செங்கோட்டையன்- திண்டுக்கல் சீனிவாசன் தினகரனுக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டோம் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என கர்நாடக அ.தி.மு.க அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறினார்.
சென்னை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் 27 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கபட்டவர்கள். அமைச்சர்கள் சீனிவாசனும்,செங்கோட்டையனும் கையெழுத்திடவில்லை இவர்கள் இருவரும் சசிகலா பொதுச்செயலாளரானதும் நியமிக்கபட்டவர்கள். அதனால் தான் அவர்கள் இருவரும் கையெழுத்திடவில்லை என கூறபட்டது.
ஆனால் இன்று பேசிய கர்நாடக அ.தி.மு.க அம்மா அணி செயலாளர் புகழேந்தி
அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் இருவரும் தினகரன் அணியில்தான் உள்ளனர். செங்கோட்டையன்- திண்டுக்கல் சீனிவாசன் தினகரனுக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டோம் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என கூறினார்.

Related Tags :
Next Story