அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா குடும்பம் அதிரடி வியூகம் 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?


அ.தி.மு.க.வை  கைப்பற்ற சசிகலா குடும்பம் அதிரடி வியூகம் 20  எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?
x
தினத்தந்தி 14 Aug 2017 1:00 PM IST (Updated: 14 Aug 2017 1:00 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா குடும்பம் அதிரடி வியூகம் வகுத்து வருகிறது அவர்களுக்கு ஆதரவாக 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறப்படுகிறது.

மேலூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு  போட்டியாக டிடிவி தினகரன்பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம்   மதுரை மேலூரில் இன்று நடக்கிறது. தனி தனி அணியாக செயல்பட்டபோது எம்.எல்.ஏ-க் களின் ஆதரவு தினகர னுக்கு இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 20 ஆக குறைந்து விட்டது. இவர்கள் அனைவரும் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தினகரனுடன் கலந்து கொள்வார்களா என எதிர்பார்ப்பு உள்ளது.

மேலூர் அழகர்கோவில் சாலையில்  இன்று மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்காக அ.தி.மு.க. தலைமைக்கழகம் தோற்றத்தில் பிரம்மாண்ட மேடை  அமைக்கப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

திரும்பிய திசையெல்லாம் அ.தி.மு.க. கொடிகள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரனின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகை யில் மின் விளக்கு அலங் காரங்கள் செய்யப்பட் டுள்ளன.  

பொதுக்கூட்ட ஏற்பாடுகளை சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன், முன்னாள் எம்.பி. ரித்திஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சாமி,  செந்தமிழன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தினகரன் இன்று அதி காலை கார் மூலம்  மதுரை வந்தார். அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார்  ஓட்டலில் தங்கி உள்ள அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று மாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தினகரன் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தினகரன் தனி அணி யாக செயல்பட தொடங்கிய போது அவரது பின்னால் சசிகலா குடும்பத்தினர் யாரும் செல்லவில்லை. ஆனால் தற்போது சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசியின் மகன் விவேக் ஆகியோரும் தினகரனுடன் ஒன்று சேர்ந்து கட்சி பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் திவாகரன் நேற்று அளித்த பேட்டியில் எங்களை பகைத்துக் கொண்டு ஆட்சியில் நீடிக்க முடியாது என்று  எச்சரித்துள்ளார். இதன் மூலம் தினகரன், சசிகலா குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு கட்சியை கைப்பற்ற அதிரடி வியூகம் வகுத்துள்ளதும் உறுதியாகி  உள்ளது.

Next Story