தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் சுப்பிரமணிய சாமி


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் சுப்பிரமணிய சாமி
x
தினத்தந்தி 14 Aug 2017 3:35 PM IST (Updated: 14 Aug 2017 3:35 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.

சென்னை,

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும். யார் நினைத்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்க அளிக்கக்கோரிய அவசர சட்டத்துக்கான வரைவு மசோதா மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story