அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு கருணாநிதிக்கு அழைப்பு


அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு கருணாநிதிக்கு அழைப்பு
x
தினத்தந்தி 15 Aug 2017 1:57 PM IST (Updated: 15 Aug 2017 1:57 PM IST)
t-max-icont-min-icon

அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு கருணாநிதி மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை

அரசு சார்பில் மாவட்டந்தோறும் எம்.ஜிஆர் நுற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 29 ந்தேதி திருவாரூரில் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கபட்டு உள்ளது.

 இதற்காக அரசு சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் பெயர் இடம்பெற்றுள்ளது. வாழ்த்துரை பிரிவில் கருணாநிதியுடன், தி.மு.கவைச் சேர்ந்த ஆடலரசன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

திருவாரூர் வன்மீகபுரத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இந்த விழாவில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க அம்மா அணி எம்.பியுமான தம்பிதுரையும் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story