ஆட்சிக்கு எதிராக யார் சதி செய்தாலும் வரலாற்றில் எட்டப்பராக சித்தரிக்கப்படுவார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்
ஆட்சிக்கு எதிராக யார் சதி செய்தாலும் தமிழக வரலாற்றில் அவர்கள் எட்டப்பராக சித்தரிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை
சென்னை ராயப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"அதிமுக ஆட்சி நூற்றாண்டு காலம் தழைக்க வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. ஜெயலலிதாவின் கனவை சிதைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் எட்டப்பராக சித்தரிக்கப்படுவார்கள்.
அ.தி.மு.க ஆட்சி இருக்ககூடாது என்பது ஸ்டாலினின் எண்ணம். மக்கள் விரோத எண்ணம், அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அதிமுகவில் தற்போது நடப்பது அண்ணன் - தம்பி சண்டை. அண்ணன் தம்பி சண்டையில் ஸ்டாலின் லாபம் தேடிப்பார்க்கிறார். குறுக்கு வழையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் எதிர்பார்க்கும் சூழ்நிலை தமிழக அரசியலில் வராது.
தேர்தல் நடத்த ரூ.1000கோடி ஆகும் என்பதை முதல்வராக துடிக்கும் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டு.
தினகரன் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது. கடத்துவதற்கு எம்எல்ஏக்கள் ஒன்றும் குழந்தை அல்ல. எம்.எல்.ஏக்களை கடத்தி ஒளித்து வைக்க அவர்கள் என்ன சின்ன குழந்தைகளா. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story