முதல்-அமைச்சர் ராஜினாமா செய்வாரா? நடிகர் கமல்ஹாசன் ‘டுவிட்’
தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்துவந்த நடிகர் கமல்ஹாசன் நேரடியாக விமர்சனம் செய்து உள்ளார்.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு மாநிலத்தில் துயர மற்றும் ஊழல் சம்பவங்கள் நிகழ்ந்தால் அம்மாநில முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்? தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்து உள்ளது. என்னுடைய நோக்கமானது சிறந்த தமிழகமாகும். என்னுடைய குரலை வலுவாக்கும் தைரியம் யாருக்கு உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். தற்போது உள்ள அரசியல் கட்சிகள் சரியில்லையெனில் மற்றொன்றை தேட வேண்டியவரும் என பதிவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story