டிடிவி தினகரன் கட்சியை கைப்பற்ற நினைத்ததால் நீக்கினார் ஜெயலலிதா - குன்னம் எம்.எல்.ஏ


டிடிவி தினகரன் கட்சியை கைப்பற்ற நினைத்ததால் நீக்கினார் ஜெயலலிதா - குன்னம் எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 15 Aug 2017 4:46 PM IST (Updated: 15 Aug 2017 4:46 PM IST)
t-max-icont-min-icon

டிடிவி தினகரன் கட்சியை கைப்பற்ற நினைத்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா என குன்னம் தொகுதி எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

சென்னை

சென்னை சேப்பாக்கம் எம்.எல் ஏக்கள் விடுதியில்  வைத்து குன்னம் தொகுதி எம்.எல் ஏ. ராமசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க அரசை  மிரட்டும் வகையில் டிடிவி தினகரன் செயல்படுகிறார். ஆட்சியை கலைக்கும் நோக்கத்தில் தினகரன் செயல்படுகிறார் . மேலூர் பொதுகூட்டத்தில், என்னைபற்ற்றி தினகரன் தவறான கருத்தை தெரிவித்து உள்ளார். கட்சியை கைப்பற்ற நினைத்ததால் கட்சியில் இருந்து டிடிவி தினகரனை  நீக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.வில் தொண்டனாக கூட டிடிவி தினகரன் இருந்தது இல்லை.அதிமுகவிற்காக எத்தனை முறை சிறை சென்றீர்கள் என்பதை தினகரன் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். அந்நிய செலவணி மோசடியில் சிங்கபூரில் கைது செய்து அழைத்துவரப்பட்டவர் டிடிவி தினகரன்

சசிகலா , டிடிவி குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார்.இமயம் போல் காக்காததால் தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். டிடிவி தினகரன் வாரிசு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். டிடிவி தினகரனை சந்திக்க கூடாது என  கூறியவரே திவாகரன் தான்.

கமல்ஹாசன் ஒரு டுவிட்டர் அரசியல்வாதி. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விளையாடட்டும் அப்போது பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story