காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது


காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது
x
தினத்தந்தி 16 Aug 2017 9:17 AM IST (Updated: 16 Aug 2017 9:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது.


சென்னை,

திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மருத்துவப் பரிசோதனைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காலை 6.40 மணியளவில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  

கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சாதாரண பரிசோதனைக்காகவே திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உணவு இறங்குவதற்காக தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த குழாயை மாற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார். காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. 

சாதாரண பரிசோதனைக்காகவே கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலைக்குள் வீடு திரும்புவார். கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக்குழாய் மாற்றப்படுகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது. மருத்துவமனையில் இருந்து கருணாநிதி சிறிது நேரத்தில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story