தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தை சாதனையாக கருதவில்லை மாஃபா பாண்டியராஜன் பேட்டி


தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தை சாதனையாக கருதவில்லை மாஃபா பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 16 Aug 2017 4:06 PM IST (Updated: 16 Aug 2017 4:06 PM IST)
t-max-icont-min-icon

தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தை சாதனையாக கருதவில்லை என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக  பன்னீர்செல்வம் அணி, மாஃபா பாண்டியராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:

ஆக.28-ம் தேதி கடலூரில் தர்மயுத்தத்தின் அடுத்த கூட்டம் நடைபெறும். இணைப்பில் பாதி அளவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.  நடிகர் கமல்ஹாசனின் விமர்சனத்திற்கு தகுந்த நேரத்தில் பதில் அளிக்கப்படும்.  தர்மயுத்தத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெற வேண்டும். தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தை சாதனையாக கருதவில்லை. 1% பெண்கள் கூட பங்கேற்கவில்லை.  தர்மயுத்தம் குறித்து தினகரன் பேசியது கண்டிக்கத்தக்கது. தர்மயுத்தத்தை இழிவுபடுத்தும் உரிமை தினகரனுக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story