ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - எடப்பாடி பழனிசாமி


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 17 Aug 2017 4:58 PM IST (Updated: 17 Aug 2017 4:58 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சென்னை

தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனைக்குப் பின்  முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்  என கூறினார்.




Next Story