போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது


போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது
x
தினத்தந்தி 18 Aug 2017 4:15 AM IST (Updated: 18 Aug 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு குறித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியதாவது:–

சென்னை,

மேலூரில் நடந்த கூட்டத்திலேயே ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரனே கோரியிருக்கிறார். காரணம் இல்லாமல் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் குற்றம் சாட்டுவதற்காக தான் இதை வேண்டும் என்கிறோம்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது முதல்–அமைச்சருக்குரிய பொறுப்பை வகித்தவர் யார்?. போலீஸ் துறையை யார் வைத்து இருந்தார். எனவே நீதி விசாரணை கண்டிப்பாக தேவை தான்.

அதேநேரத்தில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அதிலும் தமிழக அரசுக்கோ, முதல்–அமைச்சருக்கோ எந்த உரிமையும் இல்லை.

எல்லாவற்றிற்கும் பொதுச்செயலாளருக்கு தான் அதிகாரம் இருக்கிறது. தமிழக அரசு மேற்கொண்டு இந்த பிரச்சினையில் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்த்து நடவடிக்கை எடுப்போம்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story