இரு அணிகளின் இணைப்பு பற்றி பேச நேரம் வந்து விட்டது
இரு அணிகளின் இணைப்பு குறித்து வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவருமான கே.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. டுவிட்டர் பக்கத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு குறித்து கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வந்த தர்ம யுத்தத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இரு அணிகளின் இணைப்பு குறித்து வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story