ஜப்பான் நாட்டில் உருகாத ஐஸ்கிரீம் கண்டு பிடிப்பு


ஜப்பான் நாட்டில் உருகாத ஐஸ்கிரீம் கண்டு பிடிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2017 4:18 PM IST (Updated: 18 Aug 2017 4:18 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பனீஸ் ஆராய்ச்சியாளர்கள் உலகளாவிய சிக்கலை புரிந்துகொண்டு உருகாத ஐஸ்கிரீமை கண்டு பிடித்து உள்ளனர்.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்க முடியாது. ஐஸ்கிரீம்களில் ஏராளமான வகைள் உண்டு. கப் ஐஸ், கோன் ஐஸ், குல்ஃபி ஐஸ், பார் ஐஸ் இப்படி வகை வகையாக பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கின்றன.

ஜப்பான் நாட்டின் உயிர் சிகிச்சை அபிவிருத்தி ஆராய்ச்சி மையம் பாலிபெனாலை பயன்படுத்தி  உருகாத ஐஸ்கிரீம் ஒன்றை கண்டு பிடித்து உள்ளது. இந்த ஐஸ்கிரீம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது, உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்களும் அதை  சாப்பிட  முயற்சித்து வருகின்றனர்.



Next Story