திருவாரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல்


திருவாரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2017 7:34 PM IST (Updated: 18 Aug 2017 7:34 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


சென்னை,

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருதரப்பினரும் சந்தித்து, அணிகளும் இணைய உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு இருதரப்பு தொண்டர்களும் வரத்தொடங்கி உள்ளனர். நாளை திருவாரூரில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story