நீல திமிங்கல விளையாட்டை தடுக்க தீவிரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உத்தரவு
‘நீல திமிங்கலம்’ இணையதள விளையாட்டு இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் கொடூரமான விளையாட்டாக பரவி வருகிறது.
சென்னை,
‘புளூவேல் கேம்’ எனப்படும் ‘நீல திமிங்கலம்’ இணையதள விளையாட்டு இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் கொடூரமான விளையாட்டாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
‘புளூவேல் கேம்’ எனப்படும் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டு தற்போது உலகம் முழுவதும் இளைஞர்களின் உயிரைக்குடிக்கும் மிகவும் கொடூரமான விளையாட்டாக பரவி வருகிறது.
இணையதளம் மூலம் விளையாடும் இந்த விளையாட்டு இளைஞர்களின் மனதை கெடுத்து அவர்களை தற்கொலை செய்ய தூண்டுவதாக பரபரப்பான புகார்கள் எழுந்துள்ளது.
இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஏற்கனவே ஒரு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். நல்லவேளையாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.
மதுரையில் கல்லூரி மாணவர் விக்னேஷ் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டிற்கு உயிர் பலியாகியுள்ளார். ‘நீல திமிங்கலம்’ விளையாட்டிற்கு அடிமையாகி அவர் தற்கொலை செய்துள்ளார். வட மாநிலங்களிலும் இளைஞர்கள் பலர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்களின் மத்தியில் இந்த உயிர்க்கொல்லி விளையாட்டு மோகம் பரவாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெற்றோர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “தங்கள் பிள்ளைகள் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டிற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்”.
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் இது தொடர்பாக கூறும்போது ஆபத்தான இந்த இணையதள விளையாட்டை சைபர் கிரைம் போலீசாரால் கூட தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
சென்னை நகரில் இந்த விளையாட்டை இளைஞர்கள் மத்தியில் பரவாமல் தடுக்கும் வண்ணம் போலீசாரால் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விழிப்புணர்வு பிரசாரத்தை போலீசார் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “ ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை இளைஞர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாமல், ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்” என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை தனது உத்தரவின் மூலம் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் முடிந்தபிறகு இந்த விழிப்புணர்வு பிரசாரம் போலீசாரால் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Related Tags :
Next Story