மக்களின் கோபத்தை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்


மக்களின் கோபத்தை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 1 Sept 2017 12:36 AM IST (Updated: 1 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக ஆளுங்கட்சி சார்பில் அளவற்ற அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக ஆளுங்கட்சி சார்பில் அளவற்ற அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சென்னை தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை சாலையின் இரு ஓரங்களிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்று பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வைக்கப்பட்டிருந்ததை விட அதிக உயரத்தில் இவர்கள் இருவருக் கும் வானுயர கட்- அவுட் களும் அமைக்கப்பட்டிருந்தன.

எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திற்கு சென்றாலும், அதற்கு 10 மணி நேரங்கள் முன்பாகவே அந்த பகுதியில் காவல் துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்துவதும், அவசர ஊர்திக்கு கூட வழி விடாமல் போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களின் சாபங் களை வாங்கிக்கொள்வதும் என முதல்- அமைச்சரின் ஆடம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எனவே மக்களின் கோபத்தை உணர்ந்து ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். ஒருவேளை தானாக திருந்த மறுத்தால், மக்கள் விரைவிலேயே தண்டனை கொடுத்து திருத்துவார்கள்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story