அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை சென்னை ஐகோர்ட் கருத்து


அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை சென்னை ஐகோர்ட் கருத்து
x
தினத்தந்தி 1 Sept 2017 12:49 PM IST (Updated: 1 Sept 2017 12:49 PM IST)
t-max-icont-min-icon

அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை - தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

மோட்டார் வாகன சட்டம் 1988- பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல்  எந்த நபரும் பொது இடத்தில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்கள் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இன்று  (செப்டம்பர் -ந்தேதி) முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில்  வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும் என  தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அசல் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதை எதிர்த்து  தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்  அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி துரைசாமி  கருத்து தெரிவித்து உள்ளார்.

Next Story