எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் என்ன நடக்கிறது?


எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் என்ன நடக்கிறது?
x
தினத்தந்தி 1 Sept 2017 3:30 PM IST (Updated: 1 Sept 2017 3:30 PM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் என்ன நடக்கிறது?

சென்னை

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. ஒருவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரை நாங்கள் சந்தித்தபோது தொகுதி பிரச்சினைகளை முதலில் பேசினோம். அதன் பிறகு கட்சி பிரச்சினை பற்றி விவாதித்தோம். முதல்-அமைச்சர் கூறுகையில், டி.டி.வி.தினகரனை பற்றி கவலைப்பட வேண்டாம். அரசாங்கத்தை அவர் கவிழ்க்க மாட்டார். கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் விரைவில் மீட்போம்.

டி.டி.வி.தினகரன் பக்கம் உள்ள சில எம்.எல்.ஏ.க்களும் தொலைபேசியில் நம்மோடு பேசி வருகிறார்கள். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆட்சிக்கு எதிராக செல்லவில்லை. உள்ளூர் அமைச்சரை பிடிக்காததால் கருத்து வேறுபாடு காரணமாக அங்கு சென்றுள்ளனர். அவர்களும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

எனவே எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வழங்க வேண்டும், தொகுதி பிரச்சினையை  எம்.எல். ஏ.க்களுடன் கலந்து பேசி நிறைவேற்றி கொடுக்க வேண்டும். மாவட்ட நலனுக்காக அமைச்சர்கள் 
தலையிடலாம். ஆனால் குடும்ப நலனை மட்டும் பார்க்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். அ.தி.மு.க. ஆட்சி அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சி. இதை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு முதல்வர் கூறியதாக அவர்கள் தெரிவித்தார்.


Next Story