நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை:அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை:அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 1 Sept 2017 5:34 PM IST (Updated: 1 Sept 2017 5:34 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது.

காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில்,

மாணவி அனிதா உயிர் தியாகம் செய்திருக்கிறார். அனிதாவின் தற்கொலைக்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய - மாநில அரசின் தவறான அணுகுமுறை, குழப்பங்களே காரணம்.

ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கூறுகையில்,

அனிதாவின் தற்கொலையை நினைவில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில்,

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய - மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில்,

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல. நீட் விலக்குக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டார்.

Next Story