அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் இரங்கல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிப்பு


அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் இரங்கல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2017 8:36 PM IST (Updated: 1 Sept 2017 8:36 PM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்திருந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அனிதாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும்,  அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Next Story