தமிழக அரசு அறிவித்த ரூ. 7 லட்சம் நிதியுதவி பெற அனிதாவின் குடும்பம் மறுப்பு
தமிழக அரசு அறிவித்த ரூ. 7 லட்சம் நிதியுதவி பெற அனிதாவின் குடும்பம் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
சென்னை,
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடியவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா.
இவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத வேதனையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில் மாணவி அனிதா குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என கூறியிருந்தார்.
தமிழக அரசு வழங்கிய நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் அனிதா குடும்பத்தாரிடம் கொடுக்க முயன்றார். அப்போது தமிழக அரசு அறிவித்த ரூ. 7 லட்சம் நிதியுதவி பெற அனிதாவின் குடும்பம் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து அனிதாவின் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story