வாரிசாக யாரையும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டவில்லை முதல்-அமைச்சர் பழனிசாமி


வாரிசாக யாரையும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டவில்லை முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 3 Sept 2017 6:03 PM IST (Updated: 3 Sept 2017 6:02 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு பிறகு வாரிசாக யாரையும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டவில்லை என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஞ்செட்டி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் தொடர்ந்து பேசியதாவது:

நாட்டிலேயே முதலீட்டை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மின்விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. தமிழக விவசாயிகள் பயனடைவதற்காக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்தற்காக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி பயில புதிதாக அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் விரும்பும் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. 

சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால் தான், தன் வாரிசாக யாரையும் சுட்டிக்காட்டவில்லை. தொழில்துறையில் தமிழகத்தை 3-வது மாநிலமாக உயர்த்தி காட்டியவர் ஜெயலலிதா. 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். 27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். அதிமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், அதிமுக ஆட்சியை எவராலும் தொட்டு பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story