வரும் தேர்தலில் அனிதாவின் மரணத்தை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும் நடிகர் விஷால்
வரும் தேர்தலில் அனிதாவின் மரணத்தை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
சென்னை,
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடியவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா.
இவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியிருப்பதாவது:
வரும் தேர்தலில் இலவசங்களை எதிர்பார்க்காமல், அனிதாவின் மரணத்தை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும். மருத்துவம் படிக்க முடியாத, பொதுத்தேர்வுக்கு பயிற்சி பெற பணம் இல்லை என மாணவர்கள் கவலை பட வேண்டாம், என்னை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story