டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கு டாக்டர் சீட் கிடைத்தது எப்படி? பாலபாரதி பதிவால் பரபரப்பு


டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கு டாக்டர் சீட் கிடைத்தது எப்படி? பாலபாரதி பதிவால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sept 2017 5:17 PM IST (Updated: 4 Sept 2017 5:17 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கு டாக்டர் சீட் கிடைத்தது எப்படி? என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பதிவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை

டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரிலேயே மருத்துவச் சீட்டு கிடைத்ததாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தனது பேஸ்புக்கில் இன்று காலை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

இது குறித்து சட்டப்பேரவையில் நடந்த ஒரு உரையாடலை அவர் பதிவிட்டிருந்தார். அதில்,  சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.

அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள. டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜையில் அமர்ந்து சிரித்தது.

இப்படி புறவாசல் வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக, அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம் என்று பதிவிட்டுள்ளார்.



இந்த பதிவைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் மேலும் ஒரு பதிவை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அதாவது, "டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நான் நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன்.

உள்ளே இருக்கும் உளவுத்துறைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கிருஷ்ணசாமியை அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்..." என்று பதிவிட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story