ஆட்டோ மீது கார் மோதல்: 2 குழந்தைகளுடன் பெண் பலி


ஆட்டோ மீது கார் மோதல்: 2 குழந்தைகளுடன் பெண் பலி
x
தினத்தந்தி 5 Sept 2017 3:15 AM IST (Updated: 5 Sept 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகளுடன் பெண் பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள வீரசெட்டிபள்ளி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வள்ளி (30). இவர்களது மகன் கவுதமன் (7), மகள் கீர்த்தனா (4). நேற்று சந்தோஷ்குமார் மனைவி குழந்தைகளுடன் உறவினர் திருமணத்திற்காக ஆட்டோவில் குடியாத்தம் சென்று விட்டு மீண்டும் கிருஷ்ணகிரிக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆம்பூர் - வாணியம்பாடி சாலையில் புருஷோத்தகுப்பம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் விழுந்தது.
ஆட்டோ மீது காரும் தொடர்ந்து சென்று மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் ஆட்டோவில் இருந்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளி, கவுதமன் ஆகியோர் இறந்தனர்.

சந்தோஷ்குமார் மேல் சிகிச்சைக்காக வேலூர் அனுப்பி வைக்கப்பட்டார். இறந்து போன வள்ளி கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கோவேந்தன் (20) என்பவரை கைது செய்தனர்.

Next Story