மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு ஒரேநாளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்தது
மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் ஒரேநாளில் 2 அடி உயர்ந்தது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நாள்தோறும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 614 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 21 ஆயிரத்து 973 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதாவது நேற்று முன்தினம் 62.22 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 64.55 அடியாக உயர்ந்து உள்ளது. ஒரேநாளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் உள்ள நந்திசிலை, கிறிஸ்தவ கோபுரம், ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் ஆகியவை வெளியே தெரிவது வழக்கம். இந்த புராதன சின்னங்களை பார்ப்பதற்காக பண்ணவாடிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இந்தநிலையில் தற்போது நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் வெளியே தெரிந்து வந்த புராதன சின்னங்களான நந்திசிலையும், கிறிஸ்தவ கோபுரமும் மெல்லமெல்ல தண்ணீரில் மூழ்கி வருகின்றன.
நந்திசிலை அதன் கழுத்து வரை தண்ணீரில் மூழ்கி உள்ளது. கிறிஸ்தவ கோபுரம் அதன் சாளரம் வரை மூழ்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இதே நிலையில் இருந்தால் இன்னும் 2 நாட்களில் நந்தி சிலை முழுமையாக தண்ணீரில் மூழ்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story